கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி வருகிறது.
கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் பல்வேறு வகைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள நிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரித்து ஜூலை 15ஆம் தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி பட்டியலை 100 சதவீதம் மறுஆய்வு செய்ய கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “2021ஆம் ஆண்டிற்கான பயிர்க்கடன் பயனாளிகள் பட்டியலை வெளி மாவட்ட அலுவலர்கள் குழு 100 சதவீதம் மறு கூராய்வு மேற்கொண்டு அந்த அறிக்கையை ஆய்வு மேற்கொள்ளும் சரக கூட்டுறவு துணைபதிவாளரிடம் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.