MH-60 Romeo வகை ஹெலிகாப்டரின் சிறப்பு…
சிகோர்ஸ்கி MH-60 Romeo வகை ஹெலிகாப்டர்களில் எதிரிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து வேட்டையாட சென்சார்கள், ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி குண்டு உள்ளிட்ட மேம்பட்ட போர் அமைப்புகள் உள்ளன.
எத்தகைய ஆழத்தில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் கண்டறியக் கூடிய ரேடார்கள் மற்றும் சென்சார்களை கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு.
ஆயுதங்களையும் நீர்மூழ்கி குண்டுகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கவல்ல Hellfire என்றழைக்கப்படும் ஏவணைகளும் MH-60 Romeo ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டுள்ளன. நொடிக்கு 8.38 மீட்டர் உயரம் பறக்க வல்லது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 267 கிலோ மீட்டர். தொடர்ந்து 834 கிலோ மீட்டர் வரை பறக்கும் வகையிலும் அதிகபட்சமாக 3,438 மீட்டர் உயரம் வரை செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6,895 கிலோ எடை கொண்ட இந்த ஹெலிகாப்டர், 10,659 கிலோ எடை வரை சுமந்து செல்லும்.