பக்ரீத் பண்டிகை.. கேரளாவில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு..
இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று இரண்டாம் அலை கீழ்நோக்கி பயணித்து வருகிறது. ஆனால் ‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கிட்டத்தட்ட ‘கொரோனாவின் தேசம்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு அங்கு தினமும் 12,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் கூட கேரளாவில் 16,148 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாசிட்டிவ் விகிதத்தை(டிபி ஆர்) வைத்து பல்வேறு பிரிவுகளாக கட்டுப்பாடுகளை ஏற்கனவே அறிவித்துள்ளது கேரளா. அதாவது 5% க்குக் கீழே உள்ள டி.பி.ஆர் உள்ள பகுதிகள் ஏ எனவும், 5 முதல் 10% வரை டி.பி.ஆர் உள்ள பகுதிகள் பி எனவும், 10 முதல் 15% வரை டி.பி.ஆர் உள்ள பகுதிகள் சி எனவும், 15% மேல் டிபிஆர் கொண்ட பகுதிகள் டி எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. டி.பி.ஆர் விகிதத்தை வைத்து கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அளிக்கப்படுகின்றன.