குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த அதிரடி அறிவிப்பு!
பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்த விஷயம் கவனத்தை ஈர்த்துள்ளது
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு கிடைக்கும் வகையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் 2,608 நேரடி கொள்முதல் நிலையங்களில் எந்தவொரு தவறும் நடக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் மக்களுக்குதரமான அரிசி வழங்குவது குறித்து ஆட்சியாளர்கள் சிந்திக்கவில்லை. தற்போது தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரேஷன் பொருட்களை பாக்கெட் வடிவில் மக்களுக்கு கொடுக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
.