மணப்பாறையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
மணப்பாறையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கோரி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னிர்செல்வத்திடம் கோரிக்கை மனு அளித்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமத் அவர்கள்
மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்ககோரியும், குளிர்பதன கிடங்கு அமைக்ககோரியும் வேளாண்மைதுறை அமைச்சர் எம்,ஆர்.கே பன்னிர்செல்வத்திடம் மனு அளித்தார் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல்சமத் அவர் மனுவில் குறிப்பிட்டவை மணப்பாறையில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் இல்லை ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட தெற்குசேர்பட்டியில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தையே இந்தப் பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர், இது மணப்பாறையில் இருந்து 12 கிலோமீட்டர், வையம்பட்டி இருந்து 30 கிமீ, மருங்காபுரி இருந்து 40 கிமீ தொலைவிலும் உள்ளதால் விவசாயிகள் நலன்கருதி வையம்பட்டி மருங்காபுரி பகுதியில் தலா ஒரு நெல்கொள்முதல் நிலையம் அமைத்து தரகோரியும் அதைபோல் துவரங்குறிச்சி பகுதியில் மா.கொய்யா, பூ ஆகியவற்றை சேமிக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு அமைத்து தரகோரியும் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்,
செய்தியாளர் P.பாலு மணப்பாறை