தாம்பரத்தில் கொடியேற்றி வைத்த மஜக பொதுச்செயலாளர்!
தாம்பரத்தில் கொடியேற்றி வைத்த மஜக பொதுச்செயலாளர்!
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனை எதிரில் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தொழிற்சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து பெயர் பலகையை திறந்து வைத்தார். மேலும் தொழிற்சங்கத்தின் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்வின் போது பொதுச் செயலாளர் உடன் மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான பல்லாவரம் ஷஃபி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் தாம்பரம் தாரிக் ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகிர், MJTS மாவட்ட செயலாளர் பி(F)ராங்ளின், அரங்கை முஸ்தபா, MJTS நகர செயலாளர் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்