வெண் கடுகினை பயன்படுத்தி சில பரிகாரங்கள்

காலபைரவர் இந்த பிரபஞ்சத்தினை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் பாதுகாவலர். எனவே கால பைரவரின் அம்சம் பொருந்திய இந்த வெண் கடுகினை நாம் பயன்படுத்தி வீட்டில் சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் நம்மை சுற்றியுள்ள தீமைகளை அழிக்க முடியும்.

வெண்கடுகு பூஜை முறைகள்: வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி பூஜை செய்யும் பொழுதும், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் பூஜை செய்யும் பொழுதும் சாம்பிராணி தூபம் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளோம். அந்த சமயங்களில் சிறிதளவு வெண்கடுகிணையும் இந்த சாம்பிராணியுடன் சேர்த்து தூபம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நம்மை சுற்றி எப்பொழுதும் நல்லதே நடக்கும்.நம் மீது பொறாமை கொண்டவர்கள், நமக்கு எப்போதும் கெட்டதே நடக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் சிலர் நமக்குத் தீமை செய்யும் சில செயல்களை செய்து நமக்கே தெரியாமல் நமது வீட்டில் வைத்திருப்பார்கள். அவற்றை வீட்டில் இருந்து அகற்ற நாம் செய்ய வேண்டியது ஒரு தட்டில் வெண்கடுகை போட்டு அதனை பூஜை அறையில் வைத்து ஒரு அகல் தீபம் ஏற்றி வெண் கடுகின் மீது கைவைத்து “ஓம் தும் துர்காய நமஹ” என்ற துர்க்கை அம்மனின் மந்திரத்தை 108 முறை உச்சரித்து பின்னர் நமக்குத் தேவையானவற்றை வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டிக்கொண்ட பின் அந்த வெண்கடுகை வீட்டின் நான்கு மூலைகளிலும் தூவி விடவேண்டும். வீட்டின் வெளிப்புறம் இடம் இருந்தால் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு திசைகளில் உள்ள மூலைகளிலும் போட வேண்டும். இதனை ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு மேல் செய்தால் மிகுந்த பயனளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published.