முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் நிவாரண நிதி வழங்கினார்

ராணுவத்தில் பணியின் போது வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கினார்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது.

சென்னை,

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 போர் வீரர்களின் வாரிசுதாரர்களை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 13-7-2021 அன்று (நேற்று) நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியில் இருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சத்தை வழங்கினார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சோளம்பட்டி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படை வீரர் என்.பாலமுருகனுடைய தாய் குருவம்மாளும், கிருஷ்ணகிரி மாவட்டம், இராகிமானப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படை வீரர் என்.சந்தோஷின் தாய் சித்ராவும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மறைந்த படை அலுவலர் எஸ்.ஆனந்தினுடைய மனைவி பிரியங்கா நாயரும், திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் எஸ்.சபரிநாதனுடைய தாய் எஸ்.மனோன்மணியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து நிவாரண நிதியைப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்நிகழ்வின்போது, அரசு பொதுத்துறைச் செயலாளர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர் ரஹ்மான்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.