திருவுருவ பட திறப்பு!

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் M.E.கருணாநிதி அவர்களின் தந்தை தஞ்சை ம.இளந்திரையன் (வயது 76 )ஆலந்தூர் தொகுதி 32வது வட்டசெயலாளர் அவர்கள் மே 29ம் தேதி இயற்கை அடைந்தார்.

தஞ்சை ம.இளந்திரையன் அவர்கள் செய்த சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக திருவுருவ பட நிகழ்ச்சி 11.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது .

மறைந்த தஞ்சை ம.இளந்திரையன் அவரின் திருவுருவ படத்தை ( ஊரக தொழில் துறை அமைச்சர் ) தா.மோ,அன்பரசன் & R.S.பாரதி MP திறந்து வைத்தார் !

உடன் M.S.K.இப்ராகிம் , P.குணாளன் , A.கருணாகரன் , வேல்முருகன் , கிருஷ்ணமூர்த்தி மற்றும் சில தொண்டர்கள் & குடும்பத்தினர் , நண்பர்களும் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து தஞ்சை ம.இளந்திரையன் அவர்கள் செய்த பல சாதனைகளை குறித்தும் மற்றும் அவர் 62 வருடம் திமுக கழகத்தின் உண்மை தொண்டனாக வாழ்த்து விண்ணிற்கு சென்றாலும் மண்ணில் அவர் பெயரை விதைத்து சென்ற என கூறி பின்பு மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து தஞ்சை ம.இளந்திரையன் அவர்களின் குடும்பத்தினரை நலம் விசாரித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

செய்தியாளர் ம.ஜான் தினகரன் !

Leave a Reply

Your email address will not be published.