திமுக ஆட்சி குறித்து அனுப்பி வைக்கப்பட்ட மிக முக்கியமான ரிப்பபோர்ட்டில் இடம்பெற்ற விவரங்களை விவரிக்கத்தான் ஆளுநர் பன்வாரிலால் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயணத்தின் போது தாம் ஓய்வு பெற விரும்புவதாகவும் பிரதமர் மோடியிடம் கூறினாராம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தமிழக அரசின் நிர்வாகம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து மாதத்திற்கு ஒரு ரிபோர்ட்டை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பதையும், 6 மாதங்களுக்கு ஒரு முறை பிரதமரை நேரில் சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருப்பவர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். கொரோனா தாக்கம் இந்தியாவை சூழ்ந்த நிலையில், 6 மாதங்களுக்கு ஒரு முறை நேரடி விசிட் என்பது தவிர்க்கப்பட்டது.
