பூமியை தாக்க வரும் படுபயங்கர விண்கல்!
பூமியை நோக்கி வரும் அணுகுண்டை விட மோசமான விண்கல்லை தாக்கி அழிக்க சீனா தீவிரம் காட்டி வருகிறது.விண்ணில் நாம் கண்டிராத ஏராளமான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றால் நன்மையும், தீமையும் ஒருங்கே கிடைக்கின்றன. இந்நிலையில் 8.5 கோடி டன் எடை கொண்ட பிரம்மாண்ட விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் பெயர் ‘பென்னு’. முன்னதாக இந்த விண்கல் கடந்த 1999ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையில் உள்ள சிறுகோள் ஆகும்.