பாதுகாப்பு படையினர் அதிரடி..
ஜம்முவில் ட்ரோன் தாக்குலை தொடர்ந்து 2 வாரத்தில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி.
காஷ்மீர்: ஜம்முவில் ட்ரோன் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2 வாரங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையால் 15 தீவிரவாதிக் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு விமானதள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் கடந்த ஜூலை கடைசியில் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதும் ராணுவம் உடனடியாக செயலில் இறங்கியது.
ராடார் மூலம் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தொடர் தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்கும் விதமாக, ஜம்மு – காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களில் பதினைந்து தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலால் மூன்று உள்ளூர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்கள் மூன்று பேரில் தீவிரவாதி ஆரிஃப் ஹஜாம் கடந்த ஜூன் 6, 2019 அன்று இந்திய ராணுவ வீரரைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவராவார். மற்ற இரண்டு தீவிரவாதிகள் தெல்வானியைச் சேர்ந்த பசித் அகமது, அனந்த்நாக், புல்வாமாவைச் சேர்ந்த சுஹைல் அகமது என்பது அடையாளம் காணப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.M G. தமீம் அன்சாரி