நரேந்திர மோதி -கூட்டுறவுத் துறை.
இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின்கீழ் இயங்கி வந்த கூட்டுறவுத் துறையை தனியாகப் பிரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. ‘கூட்டுறவு அமைச்சகம்’ (Ministry of Cooperation) என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்கீழ் தேசிய அளவிலான கூட்டுறவு நிறுவனங்கள், பல மாநில கூட்டுறவு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனம், தேசிய அளவிலான கூட்டுறவு பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை வருகின்றன.