தூத்துக்குடி கூட்டுறவு துறை…
கொரோனா முதல் அலையின் போது மக்கள் நடமாட்டத்தை குறைக்க தூத்துக்குடி கூட்டுறவு துறை சார்பாக மக்களுக்கு காய்கறி தொகுப்பு பை நேரடியாக அவர்கள் இருப்பிடத்திற்குச் சென்று விற்பனை செய்யப்பட்டது,
அந்த தொகுப்பு பைகளை தயாரிக்கும் பணியில் 50 நாட்களாக இந்திய மாணவர் சங்க தோழர்கள் தன்னார்வலர்களாக பணியாற்றினோம்.
இரண்டாம் அலையின் போதும் 20 நாட்களுக்கு மேலாக தன்னார்வலர்களாக பணியாற்றிய இந்திய மாணவர் சங்க தோழர்களுக்கு பெருந் தொற்று காலத்தில் நாங்கள் செய்த தன்னார்வ பணியை பாராட்டி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு.பெரியசாமி அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு.கனிமொழி கருணாநிதி அவர்களும்,சமூக நலத்துறை அமைச்சர் மாண்புமிகு.கீதாஜுவன் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர்.திரு.செந்தில்ராஜ் IAS அவர்களும் மற்றும் கூட்டுறவு துறை நிர்வாகிகளும் உடன் இருந்து பாராட்டினர்.
கொரோனா முதல் அலையின் போது மக்கள் நடமாட்டத்தை குறைக்க தூத்துக்குடி கூட்டுறவு துறை சார்பாக மக்களுக்கு காய்கறி தொகுப்பு பை நேரடியாக அவர்கள் இருப்பிடத்திற்குச் சென்று விற்பனை செய்யப்பட்டது,
அந்த தொகுப்பு பைகளை தயாரிக்கும் பணியில் 50 நாட்களாக இந்திய மாணவர் சங்க தோழர்கள் தன்னார்வலர்களாக பணியாற்றினோம்.
இரண்டாம் அலையின் போதும் 20 நாட்களுக்கு மேலாக தன்னார்வலர்களாக பணியாற்றிய இந்திய மாணவர் சங்க தோழர்களுக்கு பெருந் தொற்று காலத்தில் நாங்கள் செய்த தன்னார்வ பணியை பாராட்டி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு.பெரியசாமி அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு.கனிமொழி கருணாநிதி அவர்களும்,சமூக நலத்துறை அமைச்சர் மாண்புமிகு.கீதாஜுவன் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர்.திரு.செந்தில்ராஜ் IAS அவர்களும் மற்றும் கூட்டுறவு துறை நிர்வாகிகளும் உடன் இருந்து பாராட்டினர். செய்தியாளர் செல்வராஜ் – தூத்துக்குடி