கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன…
புனேவில் இருந்து 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன…
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்பட்ட தடுப்பூசிகள் தகுதியானவர்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில், தட்டுப்பாடு காரணமாக ஒருவாரமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கூடுதல் தடுப்பூசிகளை வழங்கும்படி கோரிக்கை வைத்தார்.
அப்போது, மூன்று நாட்களில் தமிழ்நாட்டிற்கு 15 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்படி கடந்த 10 நாட்களுக்கு பிறகு புனேவில் இருந்து 42 பெட்டிகளில் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. விமான நிலையத்தில் இருந்து தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள சுகாதார கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டு நாளை முதல் தடுப்பூசி போடும் பணி வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி: S.MD. ரவூப்