8 கிலோ தங்கம் பறிமுதல்..
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது .இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், சார்ஜா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இன்றும், நேற்றும் வந்த நான்கு சிறப்பு மீட்பு விமானங்களின் மூலம் பயணிகள் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் வந்தனர். அவர்களிடமிருந்து சுமார் 3 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.