பிரதமர் மோடியுடன் உத்தரகாண்ட் முதல்.மந்திரி சந்திப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுள்ளார்.
புதுடெல்லி,
உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரியாக இருந்த தீரத்சிங் ராவத் பதவியேற்று ஆறு மாதத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, டேராடூனில் கடந்த 3-ம் தேதி நடந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், புதிய முதல்-அமைச்சராகவும் புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-அமைச்சராக புஷ்கர் சிங் தாமி கடந்த 4-ம் தேதி பதவியேற்றார். அவருக்கு உத்தரகாண்ட் மாநில கவர்னர் பேபி ராணி மௌரியா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியை தொடர்ந்து, புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமி பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர்.MG. தமீம் அன்சாரி