பழச்சாறு தொழிற்சாலையில் தீ விபத்து..
வங்காளதேசத்தில் பழச்சாறு தொழிற்சாலையில் தீ விபத்து; 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு
வங்காளதேசத்தில் பழச்சாறு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
டாக்கா,
வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் பழச்சாறு தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதன் 6வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் 3 பெண் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதுதவிர்த்து 30 பேர் காயமடைந்தனர். அவர்களை பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். எனினும், 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.M G. தமீம் அன்சாரி