தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கோரிக்கை, மின்துறை விரைந்து நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர், திருவள்ளுவர் தெருவில் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்பட்டது. இதனை கண்டவுடன் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக உடனே சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு மழை காலத்தில் மின் கம்பியில் ஏற்படும் தீப்பொறியை கொண்டு விளைவுகள் ஏற்படாதவாறு உடனே அகற்றுமாறு பம்மல் மின்வாரிய (AEE) அதிகாரியிடம் தமிழ் நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக கோரிக்கை வைத்தோம்.
அதனை தொடர்ந்து பம்மல் மின்வாரிய அதிகாரி (AEE) அவர்கள் உடனே பொழிச்சலூர் மின்வாரிய உதவி பொறியாளர் (AE) அவர்களை தொடர்பு கொண்டு மின் கம்பத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றுமாறு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பொழிச்சலூர் மின்வாரிய உதவி பொறியாளர் (AE) தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் இன்று மின்கம்பத்தில் உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டது.
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உடனே நடவடிக்கை எடுத்த பம்மல் மின்வாரிய அதிகாரி (AEE) அவர்களுக்கும், பொழிச்சலூர் மின்வாரிய உதவி பொறியாளர் (AE) அவர்களுக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்: K.N.அப்துல் ரசாக்