அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்! ஆளுங்கட்சிக்கு எதிராக 6 தீர்மானங்கள்!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மேகதாது அணை தொடர்பான பிரச்சனை என 6 தீர்மானங்கள் நிறைவேறப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா மறைவுக்கு பின் கட்சியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இபிஎஸ் ஒபிஎஸ் இருவரும், பாஜக கூட்டணியுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து தோல்வியைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன கூட்டணி அமைத்த தேர்தலை சந்தித்த அதிமுக, இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கி நிலையில் அதிமுக படுதோல்வியை சந்தித்த்து.
மொத்த 234 தொகுதிகளில் பாஜக 4 இடங்களை சேர்த்து அதிமுக கூட்டணி 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் கொங்கு மண்டலத்தை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்து.இந்த படுதோல்விக்கு, தேர்தலுக்கு முன்னதாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, தேமுதிக வெளியேற்றம், பாஜகவுடன் கூட்டணி இவை அனைத்துமே அதிமுக முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம் என வெளிப்படையாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் காய் நகர்த்தி வரும் ஜெயலலிதாவின் தோழி ச்சிகலா அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். கடந்த சில நாட்களாக இது தொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகி வரும் நிலையில், அதிமுகவில் சசிகலாவுடன் தொடர்பில் இருந்த பலரும் நீக்கப்பட்டு, அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மட்டுமல்லாது மாவட்ட அளவில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் இதேபோல் தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் உள்ளாடசி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆற்றவேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கட்சியில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேகதாதுவில் அணைகட்டும் முயற்சியை தடுக்க தமிழக அரசை வலியுறுத்துதல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படவில்லை எனில் போராட்டம் நடத்த தீர்மானம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்
என 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் ஒற்றுமையான இருக்க வேண்டியதன் அவசியத்தை பற்றியும், சசிகலா ஆடியோ பிரச்சினை குறித்து, அதிமுக பாஜக கூட்டணி குறித்து வெகுநேரம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் கட்சிக்குள் நடைபெற்று வரும் உட்கட்சி பூசல் குறித்து கடுமையாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி: S.MD. ரவூப்