கொரோனா நிவாரண பொருட்கள்..

சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தலைமையில் தேசிய வீட்டுவேலை தொழிலாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு வீட்டு வேலை நல அறக்கட்டளை மற்றும் பெரும்பாக்கத்தில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்…

தேசிய வீட்டுவேலை தொழிலாளர்கள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர்கள் நல அறக்கட்டளை சென்னை மாவட்டத்தில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு கொடுப்பதோடு அரசு நல வாரியத்தின் மூலம் சமூக நலத் திட்டங்களைப் பெற்றுத் தர உதவி செய்து வருகிறார்கள் மற்றும் வீட்டு வேலைக்கு செல்லும் குழந்தை தொழிலாளர்கள் வெளிநாடு செல்லும் வீட்டுவேலை தொழிலாளர்கள் ஆகியோர் மத்தியில் பணிபுரிந்து வருகிறார்கள் சென்னை வந்து இடம்பெயர்ந்த மக்களை பெரும்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் படப்பை நாவலூர் பகுதிக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தற்போது வாழ்ந்து வருகின்றனா் இதனால் வேலை இழந்து வருமானம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் தற்போது கொரானா தொற்று நோய் காலத்தின் வீட்டுவேலை தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றன தேசிய வீட்டுவேலை தொழிலாளர்கள் அறக்கட்டளை தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர்கள் நல அறக்கட்டளை சென்னை பெரும்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் படப்பை நாவலூர் பகுதியில் வாழும் வீட்டுவேலை தொழிலாளர்கள் சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு குரானா நிவாரணமாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் சுமார் ஆயிரத்து 500 மதிப்புள்ள நிவாரண பொருட்கள் டபிள்யூ ப்ரூஸ் ரிஜிஎன் நிறுவனத்துடன் தேசிய வீட்டுவேலை தொழிலாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர்கள் நல அறக்கட்டளை சார்பாக அரவிந்த் ரமேஷ் சட்டமன்ற உறுப்பினர் (MLA)தலைமையில் வழங்கப்பட்டது மற்றும் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் சிஸ்டர் வளர்மதி மற்றும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ரோஸி சித்ரா வாணி அவர்கள் இணைந்து பொருட்கள் வழங்கினார்கள்

செய்தி குமார்

Leave a Reply

Your email address will not be published.