5ம் தேதி முதல் அணைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வு !
தமிழ்நாடு : தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
1) ஹோட்டல்களில் தேனீர் கடைகளில் 50% இருக்கையில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி .
2) தமிழ்நாடு முழுவதும் காலை 10மணி முதல் மாலை 8 மணி வரை மது கடைகள் செயல்பட அனுமதி .
அணைத்து கடைகளும் காலை 6மணி முதல் இரவு 8மணி வரை செயல்படலாம்.
3) அணைத்து வழிபட்டு தளங்களும் நிலையான வழிமுறைகளை நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம் .
4) மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ – பாஸ் , இ – பதிவு நடைமுறை ரத்து.
5) அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50% இருக்கைகளுடன் மட்டும் பயணிகள் பயணிக்க அனுமதி .
பொது போக்குவரத்துக்கான பேருந்துகளில் குளிர்சாதன வசதிக்கு அனுமதி கிடையாது
6) வணிக வளாகங்கள் (Shopping Complex / Mall ) காலை 9 மணி முதல் இரவு 8மணி வரை செயல்பட அனுமதி .
7) திருமணங்களுக்கு 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி .
8) இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மட்டும் அனுமதி .
9) உடற்பயிற்சி கூடங்கள் , உணவகங்கள் , விளையாட்டு வசதிகளுடன் கூடிய கிளப்புகள் செயல்படலாம் .
10) அருங்காட்சியகங்கள் காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி .
11) ஐ.டி . நிறுவனங்கள் 50% பயனாளர்களுடன் இயங்க அனுமதி .
தமிழ்மலர் செய்தியாளர் ம.ஜான் தினகரன்