முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் திரு/ மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசின், 16-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 2021 ஜூன் 21ஆம் தேதி துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக முன்புபோலவே சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றது.

21ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். அதனையடுத்து கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார்.

இந்நிலையில், இன்றுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 16- வது கூட்டத்தொடர் முடிவடையும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட உள்ளது. இரண்டாவது முறையாக நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

S. முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published.