கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை ரூ,2000/- 14 வகை மளிகைப் பொருட்கள் நியாயவிலை கடைகளில் வழங்கினார்கள்
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்த கொரோனா நிவாரண தொகை ரூபாய் 4000/- தருவதாக அறிவித்து இருந்தார்.
கடந்த மே மாதம் முதலமைச்சராக திரு/ மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றபின் கொரோனா வைரஸ் நிவாரணத் உதவிதொகை முதல் தவணையாக கடந்த மே மாதம் 15-ஆம் தேதி முதல் நியாயவிலை கடையில்
ரூபாய்,, 2000/- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து இரண்டாவது தவணையாக ஜூன்-15 முதல் நிவாரண உதவித்தொகை ரூ.2000/- மற்றும் 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பு அனைத்து நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை ராயப்பேட்டை V.M.தெரு, ராமராவ் கார்டன் தெருவில் உள்ள NGO:13 தமிழக அரசு
கூட்டுறவு துறை வித்யா பாரதி கூட்டுறவு பண்டக சாலை,
எக்ஸ்,என்,சி,675
நடத்தும் நியாய விலை கடை எண்: 04 ல் உள்ள நியாய விலை கடையில் நிவாரண உதவித்தொகை ரூ, 2000/- மற்றும் 14 வகை மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை நியாய விலை கடை ஊழியர் திருமதி/ பாரதி குடும்ப அட்டைதாரர்களுடைய (smart cord) களை இணைப்பு கருவிகள் மூலம் பரிசோதித்து சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணையாக
ரூ,2000/- மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடையில் வழங்கப்பட்டது,
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.