இரானின் புதிய அதிபர் குறித்து எச்சரிக்கும் இஸ்ரேல் இரானில் எப்ராஹீம் ரையீசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சர்வதேச நாடுகள் அதீத கவலை கொள்ள வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான லியோர் ஹையட், ரையீசி இரானின் ஆதீத கடும்போக்காளர் என தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய தலைவர் இரானின் அணு திட்டங்களை அதிகரிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும், ஊழலை ஒழிக்கவும் தம்மால் முடியும் என்று வாதிட்டு இரானின் அதிபர் தேர்தலை சந்தித்த இப்ராஹிம் ரையீசி வெற்றிப் பெற்றதாக சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்டு மாதம் பதவியேற்கவுள்ள ரையீசி, இரானின் உயர் நீதிபதிகளில் ஒருவர். பழமைவாத கொள்கைகளை கொண்டவர். அவருக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கியதில் தொடர்புடையவர் என அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
வெற்றியை தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர் ரையீசி, அரசின் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தப்போவதாகவும், நாட்டில் அனைவருக்குமான தலைவராக இருக்கப்போவதாகவும் உறுதியளித்தார்.இரானில் எப்ராஹீம் ரையீ
தமிழ்மலர் செய்தியாளர் அப்துல் ரஜாக்