24/ மணி நேரம் மின் தடை புகார் அளிக்கும் தொலைபேசி எண்: 94987-94987 முதல்வர் திரு/ மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் மின் நுகர்வோருக்கான 24/ மணி நேரம் மின்தடை புகார் அளிக்கும் தொலைபேசி எண்: 94987-94987 சேவை மையத்தை தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் அவர்கள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சம்பந்தப்பட்ட புகார்களை பயனாளிகள் தெரிவிக்கும் வகையில் 24/ மணி நேர மின்தடை புகார் அளிக்கும் கட்டுப்பாட்டு அறையை ( TANGEDCO ) தலைமையகத்தில் (20/06/21) இன்று தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு/ உதயநிதி ஸ்டாலின் MLA, மின்சாரத்துறை அமைச்சர் திரு/ செந்தில் பாலாஜி திரு/ தயாநிதி மாறன் MP மற்றும் அரசு அதிகாரிகள்,
மின்வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.