சென்னை பெருநகர காவல்துறை E-2 ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு/ சார்லஸ் தலைமையில் வாகன பரிசோதனை!

கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்ததாக ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்பது பற்றி மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்,

தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஜூன்-14 ஆம் தேதியில் இருந்து ஜூன்-21 ஆம் தேதி காலை 6-00 மணி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தொடரும் – என தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழக காவல்துறை டிஜிபி, திரு/ திரிபாதி இ.கா.ப, சென்னை பெருநகர காவல் ஆணையர்,,திரு/ சங்கர் ஜிவால் ஐபிஎஸ், அவர்களின் உத்தரவுபடி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வாகன பரிசோதனை பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்,

சென்னை E-2 ராயப்பேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு/ சார்லஸ் தலைமையில் E-2 ராயப்பேட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட திருவல்லிக்கேணி லாயிட்ஸ் சாலை மார்க்கெட் பகுதியில் காவல் ஆய்வாளர் திரு/ சந்தான கிருஷ்ணன், மற்றும் தலைமை காவலர்கள் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர்,

வாகன பரிசோதனையில் தகுந்த
இ- பதிவு அத்தியாவசியம் இன்றி வெளியில் செல்லும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் நகல்கள் சரி பார்த்து அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.