கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை ரூ,2000/- 14 வகை மளிகைப் பொருட்கள் நியாயவிலை கடைகளில் வழங்கினார்கள்

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்த கொரோனா நிவாரண தொகை ரூபாய் 4000/- தருவதாக அறிவித்து இருந்தார்.

கடந்த மே மாதம் முதலமைச்சராக திரு/ மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றபின் கொரோனா வைரஸ் நிவாரணத் உதவிதொகை முதல் தவணையாக கடந்த மே மாதம் 15-ஆம் தேதி முதல் நியாயவிலை கடையில்
ரூபாய்,, 2000/-
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து இரண்டாவது தவணை நிவாரண உதவித்தொகை ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பு அனைத்து நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ்,
தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அமுதம் நியாய விலைக்கடை எண்: NA001,
NA:002 ல் உள்ள நியாய விலை கடையில் நிவாரண உதவித்தொகை ரூ, 2000/- மற்றும் 14 வகை மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை நியாய விலை கடை ஊழியர்கள் திரு/ பண்டரி நாதன் திரு/ பாஸ்கர் குடும்ப அட்டைதாரர்களுடைய (smart cord) களை இணைப்பு கருவிகள் மூலம் பரிசோதித்து சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது தவணையாக
ரூ,2000/- மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடையில் வழங்கப்பட்டது,

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.