கொரோனாவுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க யோகா உதவும்: மத்திய சுகாதார மந்திரி பேட்டி.

கொரோனா வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா பயிற்சி உதவும் என மத்திய சுகாதார மந்திரி பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ந்தேதி உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருப்பதால், 7வது சர்வதேச யோகா தினம் எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் யோகாவில் ஈடுபட்டார். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, அவரது மனைவி உஷா டெல்லியில் உள்ள இல்லத்தில் யோகாவில் ஈடுபட்டனர்.

இதுபோன்று பல்வேறு மாநிலங்களிலும் முதல் மந்திரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட படை வீரர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரபலங்கள் உள்ளிட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா தொடர்புடைய விசயங்கள் அதிகரித்து உள்ளன.

நம்முடைய உடல்சார்ந்த மற்றும் மனநலம் சார்ந்த சுகாதார விசயங்களை பராமரிக்க யோகா நமக்கு உதவி புரிந்துள்ளது. யோகா அல்லது பிற உடற்பயிற்சிகளை நம்முடைய அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக நாம் வைத்து கொள்ள வேண்டும்.
தமிழ் ? மலர் மின்னிதழ் செய்தியாளர் தமீம் அன்சாரி

Leave a Reply

Your email address will not be published.