காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

ராகுல்காந்தியின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை லாயிட்ஸ் ரோடு பகுதியில், லாயிட்ஸ் கே.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.விஷ்ணு பிரசாத் அவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கே.முகமது ஆரிப், மனோகரன், கோல்டு பாஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அ.காஜாமொய்தீன் (செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published.