பாரத பிரதமர் திரு/ நரேந்திர மோடி அவர்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கிறார்
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தலைநகர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு பாரத பிரதமர் திரு/ நரேந்திர மோடி யை சந்திக்கிறார்.
முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலுக்கு இடையே பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து வந்தார். பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார்
குறிப்பாக, செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்குவது குறித்து கடிதம் எழுதினார்.
மாநிலங்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தமிழக முதலமைச்சர் வரவேற்றார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு , கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை உயர்த்தி வழங்க வேண்டும் , கருப்பு பூஞ்சை நோய் மருந்தை அதிகரித்து வழங்க வேண்டும் , மேகதாது அணை பிரச்னை , காவிரி விவகாரம் , குறித்து இன்றைய சந்திப்பில் முதலமைச்சர் பேச உள்ளார்.
மேலும் ஹைட்ரோகார்பன் தொடர்பாகவும், தமிழகத்தில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளார்
இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் செல்லும் அவர், அதன்பிறகு டெல்லியில் உள்ள திமுக அலுவலகம் செல்கிறார்.
மீண்டும் தமிழ்நாடு இல்லம் வந்து மாலை பிரதமரை சந்திக்கிறார். நாளை மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க உள்ளார். டெல்லியில் மு.க.ஸ்டாலினுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,