D-4 ஜாம்பஜார் காவல் துறை முக கவசம் அணியாமல் வருவோர்க்கு அபராதம் விதித்தனர்!

தமிழக அரசு கொரோன வைரஸ் இரண்டாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது,

தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக காவல்துறை டிஜிபி திரு/ திரிபாதி இ.கா.ப, அவர்களின் உத்தரவுப்படி,

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு/ சங்கர் ஜீவால் IPS, ஆலோசனைப் படியும் சென்னை பெருநகர காவல் துறையினர் அனைத்து இடங்களிலும் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்,

இந்நிலையில் D-4 ஜாம்பஜார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் D-4 ஜாம்பஜார் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு/
கல்யாண குமார் உத்தரவுப்படி

உதவி காவல் ஆய்வாளர் திரு/ கண்ணரசு தலைமையில் தலைமை காவலர்கள் உதவியுடன் வாகன பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.

தகுந்த அனுமதி பெறாமல் வெளியில் சுற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு
முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் ரூ,200/- விதிக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.