எய்ட் இந்தியா (AID INDIA) என்னும் தொண்டு நிறுவனம் முகாம்
எய்ட் இந்தியா (AID INDIA) என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக சிபிஎம் தோழர்கள் மாவட்ட செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் செல்வம் ஆகியோர் ஒருங்கிணைப்பில்
நெபுலைசர், எடை பார்க்கும் கருவி, இரத்தக்கொதிப்பு அளவிடும் கருவி, N95 முக கவசம் மற்றும் மருத்துவ முக கவசம் (Surgical mask), கையுறைகள் (gloves), சுத்திகரிக்கும் திரவம் (Sanitizer), கொரோனா பாதுகாப்பு கவசம்(PPE) கட்டில்கள் உள்ளிட்ட 5இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி மூலமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசு மருத்துவர்கள் மைதிலி, அனுஷா மற்றும் நர்சிங் சூப்பரின்டென்ட் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.செய்தியாளர். சி. கவியரசு