கொடைக்கானல் இரவு நேரங்களில் முதலாளி வீட்டில் உறங்குவதும் பகலில் அரசாங்க ரோட்டில் ஆடுவதும் வழக்கமாக கொண்டிருக்கும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு அடைகிறது
கொடைக்கானல் இரவு நேரங்களில் முதலாளி வீட்டில் உறங்குவதும் பகலில் அரசாங்க ரோட்டில் ஆடுவதும் வழக்கமாக கொண்டிருக்கும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு அடைகிறது: கொடைக்கானலில் வெகுநாட்களாக நடுரோட்டில் வீட்டு கால்நடைகளால் பெரும் சிரமம் ஏற்படுகிறது ஏனென்றால் அவசர காலத்திற்கு செல்லும் ஆம்புலன்ஸ் ஏனைய வாகனங்களுக்கு முன்னால் நின்று கொண்டு போகவும் முடியாமல் வரவும் முடியாமல் வீட்டு கால்நடைகள் சிரமத்தை ஏற்படுத்துகின்றன இதனைத்தொடர்ந்து அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லியும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கின்றது முன்பெல்லாம் கொடைக்கானலில் கொண்டி தெரு என்னுமிடத்தில் இவ்வாறு சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டி தெரு என்னுமிடத்தில் அடைப்பது உண்டு அவ்வாறு அடைக்கப்படும் கால்நடைகளை மீட்க கால்நடைகளை உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி கால்நடைகளை மீட்டுக் கொண்டு வந்தார்கள் அதேபோல் இன்று சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு கொடைக்கானல் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்: செய்தி தொகுப்பு தேவா