இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், கங்கண கிரஹணமாக இன்று நிகழ்கிறது.
இதை, அருணாச்சல பிரதேசதத்தில் மிகச் சிறிய அளவில், சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது.
முழு சூரிய கிரஹணத்தின்போது சூரியனை, நிலவு முழுமையாக மறைக்கிறது.
அப்போது சூரியனின் வெளி விளிம்பு, நெருப்பு வளையம் போல தெரியும்.
இதுபோன்ற கங்கண சூரிய கிரஹணம், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணமாக இன்று நிகழ்கிறது.
கிழக்கு ரஷ்யா, ஆர்ட்டிக் கடல் பகுதி, கிரீன்லாந்து மேற்கு பகுதி, கனடா ஆகிய பகுதிகளில், கங்கண சூரிய கிரஹணத்தை காண முடியும்.
பகுதி சூரிய கிரஹணமாக வட கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகள், ஆசியாவின் வட பகுதிகளில் பார்க்க முடியும்.
இந்திய நேரப்படி மதியம் ஒரு மணி 42 நிமிடங்களுக்கு துவங்கி மாலை 6 மணி 41நிமிடங்களுக்கு கிரகணம் முடிகிறது.
✿தமிழ்?மலர்✿ செய்தி நிருபர் K.ஶ்ரீசரவணகுமார். திருப்பூர்.