சென்னை இராயப்பேட்டையில் புது கல்லூரி மற்றும் காவல் நிலையம் இணைந்து நடத்தும் இலவச உணவு திட்டம்
சென்னை,
இராயப்பேட்டையில் அமைந்துள்ள புதுக்கல்லூரி யானது தனது பேராசிரியர்கள் துணைக்கொண்டும் இராயப்பேட்டை காவல் நிலையத்தின் துணைக்கொண்டும் இணைந்து நடைபெறும் இலவச உணவு திட்டம்.
இந்த இலவச உணவு திட்டமானது கடந்த மாதம் மே 15 முதல் இந்த மாதம் ஜூன் 7 வரை நடைபெறுகிறது.
இத்திட்டத்திற்கு ” பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள் பணம் வேண்டாம் ” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இலவச உணவு திட்டமானது பெருந்தொற்று காலத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கானது. இத்திட்டமானது சில வாரங்களுக்கு மட்டுமே இருந்தது தற்பொழுது உணவின்றி தவிப்பவர்களின் நிலை அதிகரித்ததால் இன்றளவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பசியால் வாடுவோர் இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுமா என்ற ஏற்பட்ட அச்சத்தை போக்கி புதுக்கல்லூரியானது உணவளித்து பசியாற்றும் அன்னையாக மாறியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்கள் மேலும் இதில் கொரானா இல்லா உலகை உருவாக்குவோம் மற்றும் அரசாங்க வழிமுறைகளை பின்பற்றுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள பதாகையும் உள்ளது.
இதில் திரு. நிஜாமுதீன் சாகிப், திரு. இலியாஸ் சயித் சாகிப், திரு. முஹம்மது அப்துல் அலி, திரு. கமால் நாசிர், திரு. சேக் முஹம்மது, திரு. பஷீர் அகமது ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
-செய்தியாளர்
ரசூல் மொய்தீன்