சேலத்தில் ஊரடங்கில் ரகசிய மது விற்பனை: கர்நாடகத்தில் இருந்து கடத்தி வந்த117 மதுபாட்டில்கள் பறிமுதல்
சேலம்:
ஊரடங்கில் ரகசிய மது விற்பனை செய்வதற்காக கர்நாடகத்தில் இருந்து சேலத்துக்கு கடத்தி வந்த 117 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன தணிக்கையின் போது மோட்டார் சைக்கிளில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.!!
ரகசியமாக மது விற்பனை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின்போது அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.!! இதனால் மது பிரியர்கள் மதுகுடிக்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.!!
இதனை அறிந்த ஒரு சிலர் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து ரகசியமாக மது விற்பனை செய்து வருகின்றனர். அப்படி விற்பனை செய்யப்படும் மதுவானது முழு பாட்டிலின் விலை ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வாக இருந்தாலும் ரகசிய மதுபான விற்பனையானது சேலத்தில் ஜோராக நடந்து வருகிறது.
வாகன தணிக்கை
இதனை அறிந்த சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வடக்கு சரக போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மேற்பார்வையில் அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் இட்டேரி ரோடு பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபர் வைத்திருந்த அடடை பெட்டியை சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர்.
117 மதுபாட்டில்கள்
அந்த அட்டை பெட்டியில் 19 பீர் பாட்டில்கள் மற்றும் பிராந்தி, ரம் வகை மதுபானங்கள் என மொத்தம் 117 மதுபாட்டில்கள் இருந்தன. அவை கர்நாடக மாநிலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்டதும், சேலம் மாநகரில் ரகசிய விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மதுபாட்டில்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் விசாரித்த போது அந்த நபர், சேலம் சின்ன திருப்பதி சாந்திநகர் பகுதியை சேர்ந்த அரிகரசுதன் (வயது46) என்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்து 117 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலுக்கு அவருக்கு உடந்தையாக கூட்டாளி ஒருவர் இருந்ததும் தெரிய வந்துள்ளது. அந்த நபரை போலீசார் வலைவிசி தேடி வருகின்றனர்.!!
தமிழ்?மலர் செய்தி நிருபர் K.ஶ்ரீசரவணகுமார். திருப்பூர்