பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-5 மீன் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின்
அறிவுரையின் படி சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னை மண்டலம் -5
கோட்டம்-62 சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வளாகத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் திரு/ ககன் திப் சிங் பேடி இ.ஆ.ப, தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பெற்று அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முன்வந்து கொரோனா வைரஸ் தடுப்பூசி மருத்துவர்கள் முன்னிலையில் செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போட்டனர். தடுப்பூசி சிறப்பு முகாமில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெற்றனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாமில் சென்னை பெருநகர மாநகராட்சி வட்டார ஆணையர் திரு/ ஆகாஷ் சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்,
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்