குழந்தை திருமணம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை
தூத்துக்குடியில் நேற்று வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த இளம்பெண்னின் சகோதரர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேரில் சென்று அவரது சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். பின்னர் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜூவன் 1-லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். தொடர்ந்து கொரொனா பாதிப்பினால் தாய், தந்தையினை இழந்த குழந்தைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டள்ள கேர் செண்டர்னை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜூவன் கூறுகையில்.
✍தூத்துக்குடி மாவட்டத்தில் கொரொனா பாதிப்பினால் தாய், தந்தையினை இழந்த குழந்தைகளை பாதுகாக்க மாவட்டத்தில் 4-கேர் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்
கொரொனா பாதிப்பினால் இதுவரை தாய், தந்தையை இழந்ததாக 361- குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றார்.
✍மேலும் கொரொனா நோய் தொற்றின் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாத உதவிதொகை மற்றும் அவர்கள் பள்ளி, கல்லூரிகள் படிப்பு செலவினை அரசு ஏற்கும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மாவட்டத்தில் இதுவரை தாய் தந்தையே இழந்த 72-குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 10-ஆண்டுகளில் குழந்தைகள் திருமணம் என்பது அதிகரித்துள்ளது. எனவே குழந்தைகள் திருமணம் விசயங்களில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க சொல்லி உள்ளது எனவே இனி வரும் நாட்களில் குழந்தைகள் திருமணம் நடைபெறாது மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் S.S சக்திவேல்