மயிலாப்பூர் SDPI சார்பாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஆங்காங்கே பரவி வரும் சூழ்நிலை காரணமாக மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மேலும் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பித்தது.
இதில் ஏழை, எளிய மக்களுக்கு பலவகையில் பல தொண்டு இயக்கங்கள் உதவி செய்து வருகிறது.
அதில் மயிலாப்பூர் சோசியல் டிமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) சார்பாக பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய 20 குடும்பங்களுக்கு 14 வகை அடங்கிய
மளிகைப் பொருள் (Provision Kit) இன்று வழங்கப்பட்டது.
செய்தியாளர்
காஜா மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்