திருச்சியில் கூலி தொழிலாளி மனைவியின் பிரசவத்திற்கு உதவிய காவலர்
திருச்சியில் ஏழைக் கூலித் தொழிலாளி தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை பிரசவத்திற்காக திருச்சி மருத்துவமனைகளில் சேர்த்திருந்தார்,
நிறைமாத கர்ப்பிணியை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறார் உங்கள் மனைவிக்கு உடனடியாக B+ இரத்தம் ஒரு யூனிட் தேவை எங்களிடம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இரத்தம் கொடுப்பவர்கள் யாராவது இருந்தால் அழைத்துவர மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திருச்சி வீதிகளில் செல்கிறார்.
இந்நிலையில் காவலர் ஒருவர் அவரிடம் ஊரடங்கு நேரத்தில் வெளியே வருவது சரி இல்லை நீங்கள் எந்த காரணத்திற்காக வெளியே வந்தீர்கள் என்று கேட்டுள்ளனர்.
தனது மனைவி நிறைமாத கர்ப்பிணி மருத்துவமனையில் பிரசவ வலியுடன் உள்ளார். அவருக்கு உடனடியாக B+ இரத்தம் தேவைப்படுகிறது. என்று கூலித்தொழிலாளி காவலரிடம் தெரிவிக்கிறார்.
கூலி தொழிலாளி சொன்னவுடன் தனது இருசக்கர வாகனத்தில் காவலர் கூலித் தொழிலாளியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் விரைந்து சென்று காவலர் திரு/ செய்யது அபுதாகிர் கூலி தொழிலாளியின் மனைவிக்கு இரத்தம் வழங்குகிறார்.
ஏழை கூலி தொழிலாளியின் மனைவி நலமாக குழந்தை பெற்றெடுத்து தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
இந்தச் செய்தி திருச்சி முழுவதும் பரவியதால் திருச்சி காவல் ஆணையர் கவனத்திற்கு சென்றதும் கூலித் தொழிலாளி உதவிய காவலர்
செய்யது அபுதாஹிர் அழைத்து பாராட்டி கூலித்தொழிலாளி மனைவிக்கு உதவியதற்காக ரூ/25,000/- திருச்சி காவல் ஆணையர் வழங்கினார்.
தனக்கு கிடைத்த சன்மானத்தை எடுத்துச்சென்று மருத்துவமனையில் பிரசவித்த கூலித்தொழிலாளியின் மனைவியின் மருத்துவம் செலவுகள்(bill) அனைத்தும் மருத்துவமனைக்குச் சென்று கட்டிவிட்டு மீதி உள்ள பணத்தை கூலித் தொழிலாளியிடம் கொடுத்துவிட்டு சொல்கிறார். எதற்கும் பயப்பட வேண்டாம்.
எல்லாம் இறைவன் இருக்கிறான் என்று கூறி கூலி தொழிலாளிக்கு உற்சாக வார்த்தை கூறி விடைபெற்றார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்