கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டை ஆய்வு செய்தார் : MLA உதயநிதி ஸ்டாலின்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிர் இளந்தோரின் எண்ணிக்கை அதிகம்.

கொரோனவால் உயிர் இழந்தவர்களை அவர்களின் மதப்படி நல்லடக்கம் செய்வதும் எரிப்பதும் வழக்கம். அதன் நடைமுறையில்
கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் சடலங்கள் எரியூட்டப்படும்போது புகை வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தனர்.

அந்த மனுவை பரிசீலனை செய்து உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதை சரி செய்யுமாறு கூறி இருந்தார்.

அதன் அடிப்படையில் சுடுகாட்டு பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து இன்று சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

செய்தியாளர்
காஜா மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.