மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு!

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் இருக்கிறது. இதனால் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களைப் புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களின் நலனுக்காக ஆன்லைன் சேவைகளை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாகனங்கள் தொடர்பான பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலமாகவே பெறமுடியும்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் டிரைவிங் லைசன்ஸ் வாங்குவதற்கு நேரடியாகச் சென்று தேர்வில் பங்கேற்கத் தேவையில்லை. ஆதார் இருந்தாலே போதும்; ஆன்லைன் மூலமாகவே லைசன்ஸ் வாங்கிவிடலாம். புதிய வசதியின்படி, நீங்கள் ஆர்.டி.ஓ. அலுவலகம் தொடர்பான 18 வகையான சேவைகளை ஆன்லைன் மூலமாகவே பெறமுடியும். கீழ்க்காணும் அனைத்து ஆவணங்களையும் நீங்கள் ஆன்லைன் மூலமாகவே பெறலாம்.

  1. லைன்சஸ் விண்ணப்பம் (LLR)
  2. டிரைவிங் லைசன்ஸ் புதுப்பிப்பு
  3. டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ்
  4. சர்வதேச ஓட்டுநர் அனுமதி (பெர்மிட்)
  5. லைசன்ஸ் மற்றும் RC-இல் முகவரி மாற்றம்
  6. தற்காலிக வாகனப் பதிவு
  7. வாகனப் பதிவு NOC
  8. வாகன உரிமையாளர் மாற்றம்

இன்னும் பல சேவைகள் இதில் உள்ளன. ஆர்.டி.ஓ. தொடர்பான இந்த சேவைகளை நீங்கள் பெறுவதற்கு https://parivahan.gov.in/parivahan/ என்ற முகவரியில் செல்ல வேண்டும்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,

Leave a Reply

Your email address will not be published.