கொரோனா அதிவேகமாக பரவி வருவதால்

உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் தமிழக அரசு மற்றும் தமிழக முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் , மற்றும் அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் பலவித கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் (18/05/2021) செங்கல்பட்டு மாவட்டம் J-12 கானத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை மாயாஜால் பகுதிகளில்
J-12 காவல் துணை ஆய்வாளர் பி. லாசர் அவர்கள் முன்னிலையில் , தலைமை காவலர் செந்தில் வேல் அவர்கள் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மருத்துவ அவசரம் இறுதி காரியம் போன்ற காரணங்களுக்காக செல்வோருக்கு மட்டும் அனுமதி அளித்தனர், இந்நிலையில் தகுந்த
இ-பாஸ் அனுமதி பெறாமல் வரும் வாகனங்களை காவலர்கள் பிடித்து உரிய ஆவணங்களை காண்பிக்குமாறு வாகன ஓட்டிகளை கேட்டுக் கொண்டனர், தகுந்த அனுமதி பெறாமல் வரும் வாகனங்களை பறிமுதல் ,செய்து மற்றும் அபராதம் விதித்தனர்.

A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்,
தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.