முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி வழங்கினர்
தமிழக அரசு தமிழக முதலமைச்சர்
மு க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனவைரஸ் நிவாரண நிதி
முதல் தவணையாக ரூ2000/-அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சி நியாய விலை கடையில் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற திமுக உறுப்பினர் E.கருணாநிதி MLA, தலைமையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் , முன்னிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது, பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மற்றும் முக கவசம் அணிந்து வரிசையில் நின்று பெற்று கொண்டு சென்றனர், இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பொழிச்சலூர் திமுக ஒன்றிய பிரதிநிதி மூர்த்தி கமல், பொழிச்சலூர் திமுக கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்