ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்து ஆம்பலன்ஸ்
தேவைப்படும் இடங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்து ஆம்பலன்ஸ் இயக்க அரசு தயாராக உள்ளது என போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னையிலிருந்து விமானத்தில் மதுரைக்கு வந்தார்.
அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆதிகாரிகளும் ஆலோசனை நடத்தவுள்ளேன்.
தமிழக்தில் மகளிர்கள் இலவச பேருந்து பயண திட்டம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
மதுரை, திருச்சி, கோவை நகரங்களுக்கு அருகாமை மாவட்டங்களிலிருந்து முன்களப் பணியாளர்களுக்காக பேருந்துகள் இயக்குவது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
கரனோ ஒழிப்பு நடவடிக்கைக்கு பிறகு போக்குவரத்துறை சீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும்.
மாவட்டங்களில் தேவைப்பட்டால் முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட பேருந்து ஆம்புலன்ஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
தமிழ் மலர்.
மின்னிதழ்.செய்தியாளர்
தமீம் அன்சாரி..