பம்மல் நகராட்சியில் தெருநாய்களின் பயமுறுத்தல்..
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி பம்மல் நல்லதம்பி சாலை மற்றும் முதல் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் தெருநாய்களின் கூட்டம் தினமும் பயமுறுத்தல் காரணமாக பொதுமக்களும் சிறுவர் சிறுமிகளும் விளையாடும் இடங்களில் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் சாலையில் செல்லும் பொழுது சிறுமியை நாய்கள் விரட்டி துரத்தி கடிப்பது போல் காட்சி வந்தது. அதுபோல் நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறு உள்ளதால் அந்த சாலையில் செல்வதற்கு சிரமப் படுவதால் பம்மல் நகராட்சி அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சரியான முறையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்