காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சென்னை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொற்றை கட்டுப்படுத்தும்விதமாக இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகள் அரசு அறிவித்தது. .ஞாயிற்க்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமைகளில் மீன்கடை மற்றும் இறைச்சிகடைகளில் கூட்டம் அதிக அளவு கூடுகிறது. முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டது. இதனால் அரசு சனிக்கிழமை மீன்கடை மற்றும் இறைச்சிகடைகள் திறக்க கூடாது என்ப த்டை விதித்தது.
இதனால் இப்போது வெள்ளிக்கிழமை மீன்கடை மற்றும் இறைச்சிகடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை காசிமேட்டில் இன்று அதிக அளவில் மீன் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். அதே சமயம் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியின்றியும் குவிந்ததால் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.

செய்தியாளர் ரஹ்மான்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.