ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட்டின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து கெலாட் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.இது பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள கெலாட், தனது மனைவிக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாகவும், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக தானும் தனிமைப்படுத்தி கொண்டு, டாக்டர்களின் ஆலோசனையை பெற்று வருகிறேன் என்றும் கூறி உள்ளார். இந்நிலையில், மனைவியை தொடர்ந்து முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.

செய்தியாளர் ரஹ்மான்

தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.