ஒன்றுமேயில்லாமல் ஒரு பாட்டு இந்த அளவுக்கு ஹிட் ஆகிவிடாது.

சினிமா சம்பந்த பட்ட ஒரு விழாவில் கவிஞர் வாலி அய்யா பேசியது
முக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார்.
வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த எனக்கு வாழ்வுப் பிச்சை போட்ட முக்தா சீனிவாசனை நான் மூச்சுள்ளளவும் மறப்பதற்கில்லை”

“எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும்
எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே.

அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன்”

என்று பேசியதை வாசித்தபோது செஞ்சோற்றுக்கடன் என்பதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது

அந்தவிழாவுக்கு கண்ணதாசனை அழைக்கிறார்கள்.விழா குழுவினர்
தான் ஒரு பாடலும் எழுதாத விழாவுக்கு அழைக்கிறார்களே,

இன்னொருவர் எழுதியதை பாராட்ட கூப்பிடுகிறார்களே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் சிரித்தபடியே மேடையில் ஏறி அமர்கிறார் கவியரசர்

‘கண்ணதாசன், பேச துவங்கினார் ‘.
அவர் பாடல்களையெல்லாம் நானும்தான் கேட்டேன். குறிப்பாக

?அத்தையடி மெத்தையடி பாடலை இப்போதுகூட காரில் வரும்போது கேட்டு கொண்டுதான் வந்தேன்.

பாடலாசிரியர் நன்றாக எழுதியுள்ளார். ஒன்றுமேயில்லாமல் ஒரு பாட்டு இந்த அளவுக்கு ஹிட் ஆகிவிடாது.

அதேபோல

?’பக்கத்துவீட்டு பருவமச்சான்’ என்ற ஒரு பாடலில், ‘பார்வையிலே வடம் புடிச்சான்’ என்ற வரி வரும்.

இது சாதாரண வரிகிடையாது. ஒரு மிகச்சிறந்த கவிஞனால்தான் எழுத முடியும் என்றார்.

அவ்வளவுதான்… மேடையில் உட்கார்ந்திருந்த வாலிக்கு கண்கள் பனித்தன. முதல் பாராட்டு. முதல் அங்கீகாரம். கவியரசரிடமிருந்து கவிஞருக்கு கிடைத்த முதல் வரவேற்பு இது.

கண்ணதாசனால்
பலதிரைப்படங்களில்
பாடல் வாய்ப்புகள் கிடைத்தன

தமிழ்த் திரையுலகில் தனது எழுத்துக்களை பதிவுச் செய்ய கவிஞர் வாலி ஏற்றுக் கொண்ட சோதனைகளை ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனாலும் எடுத்துச் சொல்ல இயலாது.

திரைப்படத்தில் முதன்முதலாக எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்’ என்ற திரைப்படத்தில், கவிஞர் வாலி ஒரு பாடலை எழுதினார்.

தயாரிப்பாளர் சுலைமான்,
இயக்குனர் முக்தா வி.சீனிவாசன் இருவரின் இதயத்தில் இடம் பெற்றார் கவிஞர் வாலி.

‘இதயத்தில் நீ’ என்ற படத்தில் மூன்று பாடல்களை வெள்ளித் திரையில் வித்திட்டார்.

?பூ வரையும் பூங்கொடியே
பூமாலைப் போடவா
பொன்மகளே வாழ்கவென்று
பாமாலைப் பாடவா…

?உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்றொரு பொருளிருக்கும்…

?ஒடிவதுபோல் இடை இருக்கும்
இருக்கட்டுமே-அது
ஒய்யார நடை நடக்கும்
நடக்கட்டுமே…

?மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா

?மாதவி பொன்மயிலால்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்

?வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல் பாடலை கேட்டு அண்ணா வெகுவாக வாலியை பாராட்டினாராம்

?உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உயிருக்கு உயிராய் காணும்
ஒரு வாசல் பள்ளி வாசல்…

?அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்

?உனக்கென்ன குறைச்சல் – நீயொரு ராஜா..
வந்தால் வரட்டும் முதுமை!
தனக்குத்தானே துணையென நினைத்தால்
உலகத்தில் ஏது தனிமை?

கவிஞர் வாலிக்கு ‘கற்பகம்’ என்ற படத்தின் மூலம் பாட்டெழுத வாய்ப்பளித்து கவிஞரின் வாழ்க்கைக்குக் கை கொடுத்த தெய்வமாக விளங்கினார் கே.எஸ்.ஜி.

?மன்னவனே அழலாமா? கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க…

.இறுதி சரணத்தில் கதாநாயகியின் வாயிலாகக் கவிஞர் வைத்த வேண்டுகோள் கண்ணீரை வரவழைத்தது.

?உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலைப் புரியாதா?
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாள் தெரியாதா?
என் உடலில் ஆசை யென்றால்
என்னை நீ மறந்துவிடு!
என் உயிரை மதித்திருந்தால்
வந்தவளை வாழவிடு!

சாட்டையால் சுரீரென்று கொடுத்த அடிபோல் வந்து விழுந்த இந்த வரிகளை ரசிகர்கள் ஆமோதித்தது பலத்த கைதட்டல்களாக பரிமளித்தது.

கவிஞர் வாலியின் அந்த வைர வரிகள் கற்பகம் என்ற திரைப்படத்தில் மட்டுமின்றி கவிஞரின் வாழ்க்கைக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

?கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்
கந்தனே உனை மறவேன்,”

டி.எம்.சௌந்திரராஜனின் பக்திரசம் சொட்டும் இப்பாடல் இன்றும் வானொலிகளில் அதிகாலையில் ஒலித்து உலகைத் துயிலெழுப்பி வருகின்றது.

இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அது பல வருடங்களுக்கு முன்பு.

?’தரைமேல் பிறக்க வைத்தான் – எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் – பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்

என்று மீனவர் வாழ்க்கையில் அவலத்தையும் எளிமையாகப் புரிய வைக்க அவரால் முடியும்.

அதே தமிழால்

?‘சின்ன ராசாவே சிட்டெறும்பு உன்னைக் கடிக்குதா?’ என்று இளமைத்துள்ளலையும் வெளிப்படுத்த முடியும்.

?”ஒளி விளக்கு,” படத்திற்காக அவர் எழுதிய “ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்,” என்ற பிரார்த்தனைப் பாடலை,

தாய்ப்பாசம் குறித்து எத்தனையோ பாடல்கள் வந்திருந்தாலும், கவிஞர் வாலி எழுதி, இசைஞானி இசையமைத்து, யேசுதாஸ் பாடிய

?“அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே?” பலரின் மனதில் பசுமையாய்ப் பதிந்து கிடக்கிறதே?

Sgs கம்பளை இலங்கை

Leave a Reply

Your email address will not be published.